• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஜெயங்கொண்டத்தில் பொதுமக்கள் திமுக நகர செயலாளரிடம் வாக்குவாதம்!.

Byதரணி

Mar 5, 2022

ஜெயங்கொண்டம் நகராட்சி தலைவர் பதவி தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டது.  இதை அடுத்து  21 வார்டுகளுக்கு கடந்த 19ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்து வெற்றி பெற்ற வேட்பாளர்களிள், திமுக சார்பில் 18வது  வார்டில், மொத்த வாக்குகள் 1044, பதிவான வாக்குகள் 885, இதில் 790  வாக்குகளைப் பெற்று கிருபாகரநிதி தமிழகத்தில் நடந்து முடிந்த நகர மன்றத் தேர்தலில் 93 சதவீத வாக்குகள் பெற்ற வெற்றி ஒரே வேட்பாளர்.

இந்நிலையில் திமுக அமைச்சர், எம்எல்ஏ மாவட்ட பொறுப்பாளர்கள்  ஒன்றிய நகர பொறுப்பாளர்கள், கிருபாநிதி தான் ஜெயங்கொண்டம் நகராட்சித் தலைவர் என்று உறுதி கூறிய நிலையில், கடைசி நேரத்தில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு மாற்றப்பட்டதால் அதிர்ச்சியடைந்த நிலையிலும் கட்சிக் கட்டுப்பாட்டை ஏற்று விடுதலை சிறுத்தைகளுக்கு கிருபாநிதி தனது ஆதரவைத் தெரிவித்த நிலையில்.18 வது வார்டு பொதுமக்கள் திமுக நகர செயலாளரும் நகராட்சித் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாநிதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கலைகதிரவன் தலைமையில் இன்ஸ்பெக்டர்  சண்முகசுந்தரம்  உள்ளிட்ட போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த பொதுமக்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.