• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

எஸ்.கே கூட என்ன கம்பேர் பண்ணாதீங்க! – விமல்

தொடர்ந்து படங்களில் தோல்விகளை கண்டு வந்த நடிகர் விமல், பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான விலங்கு என்ற வெப் சீரிஸில் நடித்து பாராட்டுகளை பெற்று வருகிறார்..

சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் பேசிய விமல் சிவகார்த்திகேயனுடன் தன்னை compare செய்ய வேண்டாமென பேசியுள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகிறது.

கில்லி,, குருவி, கிரீடம், பந்தயம், காஞ்சிவரம் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த நடிகர் விமல் பசங்க படத்தின் மூலம் முதல் முறையாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். பசங்க வெற்றி பெற்றதை தொடர்ந்து களவாணி, தூங்காநகரம், எத்தன்,வாகை சூடவா, கலகலப்பு என விமல் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் தொடர் வெற்றிகளை பெற்று வந்தது.

இந்நிலையில் விமல் நடிப்பில் வெளியான பல படங்கள் தொடர்ந்து தோல்விகளை தழுவியது. இந்நிலையில் இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் விலங்கு என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். விறுவிறுப்பான திரில்லர் கதை களத்தில் சமீபத்தில் ஜீ5ல் வெளியான இந்த வெப் சீரிஸ் தொடர்ந்து ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயனின் வெற்றி குறித்து கேட்ட கேள்விக்கு விமல் கூறியுள்ள பதில் இப்போது இணையதளத்தில் வைரலாகிறது.

விமல் மற்றும் சிவகார்த்திகேயன் கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் இணைந்து நடித்து இருப்பார்கள். அப்போது சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் நடிகராக இருந்தார் விமல் பிஸியாக முன்னணி நடிகராக இருந்தார். ஆனால் இன்று சிவகார்த்திகேயன் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளார் என விமல் மற்றும் சிவகார்த்திகேயனை compare செய்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த விமல் சிவகார்த்திகேயன் கூட என்ன compare பண்ணாதீங்க ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும் அந்த மாதிரி சிவகார்த்திகேயன் தன்னுடைய ஸ்டைலில் வளர்ந்து கொண்டுள்ளார் அதேபோல் நானும் எனக்கான ஸ்டைலில் போராடி பயணித்துக் கொண்டுள்ளேன் எனவே யாரையும் யார் கூடயும் compare பண்ணாதீங்க. என சக நடிகரை விட்டுக்கொடுக்காமல் விமல் பேசியுள்ள அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.