• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

உக்ரைனிலிருந்து 2000 இந்தியர்கள் மீட்பு..

Byகாயத்ரி

Mar 1, 2022

உக்ரைனில் சிக்கி தவித்த 2000த்திற்கும் அதிகமான இந்தியர்கள் ருமேனியா, ஹங்கேரி எல்லைகளில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளார்.

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் கங்கா’ என ஒன்றிய அரசு பெயரிட்டுள்ளது. இதன் மூலம் நேற்று வரை உக்ரைனின் அண்டை நாடுகள் வழியாக 4 விமானங்கள் மூலம் இந்திய மாணவர்கள் நாடு திரும்பி உள்ளனர். ருமேனியாவின் புக்காரெஸ்டில் இருந்து புறப்பட்ட முதல் ஏர் இந்தியா விமானம் 219 மாணவர்களுடன் மும்பை வந்தடைந்தது. அதைத் தொடர்ந்து, 2வது விமானம் 250 மாணவர்களுடன் டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தது.ஹங்கேரி தலைநர் புடாபெஸ்ட் நகரில் இருந்து 240 மாணவர்களுடன் 3வது விமானம் டெல்லிக்கும், புக்காரெஸ்டில் இருந்து 198 மாணவர்களுடன் 4வது விமானம் டெல்லிக்கும் வந்தடைந்தன.ருமேனியா தலைநகர் புக்காரெஸ்டில் இருந்து 249 இந்தியர்கள் நேற்று காலை 5வது விமானத்தில் டெல்லி வந்தனர். இதைத்தொடர்ந்து ஹங்கேரி தலைநகர் புதாபெஸ்டில் இருந்து 240 இந்தியர்களுடன் 6-வது விமானம் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் டெல்லி வந்து சேர்ந்தது.

மேலும் ருமேனியா தலைநகர் புக்காரெஸ்டிலிருந்து 182 இந்தியர்களுடன் 7வது விமானம் இன்று காலை மும்பை வந்து சேர்ந்தது. இந்த நிலையில், ஹங்கேரியின் புடாபெஸ்டில் இருந்து ஆபரேஷன் கங்காவின் 8வது விமானம் டெல்லிக்கு புறப்பட்டது. உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 216 இந்தியர்களுடன் 8வது சிறப்பு விமானம் டெல்லி புறப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைனில் சிக்கித்தவித்த 218 பேருடன் ருமேனியா தலைநகர் புக்காரெஸ்டில் இருந்து 9வது விமானம் டெல்லிக்கு புறப்பட்டது. ருமேனியா, ஹங்கேரியில் இருந்து வரும் 9 விமானங்களில் உக்ரைனில் வசித்த 2000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.