• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

தசைநார் சிதை நோயால் தவிக்கும் 2 வயது சிறுமியின் பரிதாபநிலை!..

By

Aug 21, 2021

தஞ்சாவூரில், முதுகு தண்டுவட தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு, 16 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்து வாங்க பெற்றோர்கள் தவித்து வருகின்றனர்.

நாஞ்சிக்கோட்டை சாலை சீராஜ்பூர் நகரைச் சேர்ந்தவர் ஜெகதீஸ். ரெப்கோ வங்கியில் உதவி மேலாளராகவும் மனைவி எழிலரசி, ரெப்கோ வங்கியில் ஜூனியர் அசிஸ்டண்டாகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பாரதி என்ற 2 வயது மகள் உள்ளார். இந்த சிறுமிக்கு கடந்த 9ம் தேதி முதுகு தண்டுவட தசை நார் சிதைவு என்ற நோய் இருப்பது டாக்டர்களால் கண்டறியப்பட்ட நிலையில், தானாக எழுந்து நிற்க முடியாத நிலையில் தவித்து வருகிறாள்.


சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், இவருக்கு, ‘ZOLGENSMA’, என்ற ஊசி மருந்து செலுத்தினால் மட்டுமே குணப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளனர். மருந்தின் விலை 16 கோடி ரூபாய், அதன் இறக்குமதி வரி 6 கோடி உடன் சேர்த்தால் மொத்தம் 22 கோடி ரூபாய் செலவாகும் என கூறியுள்ளனர்.

தன் மகளின் சிகிச்சைக்காக இவ்வளவு பெரிய தொகையை எங்களால் திரட்ட முடியாது என்றும், நண்பர்கள், உறவினர்கள் உதவியால் வெறும் 50 லட்சம் தான் திரட்ட முடிந்துள்ளதாவும் வேதனை தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்ல பொதுமக்கள் உதவ வேண்டும் என்றும்,
உதவிகள் வழங்க, 97917 9345 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.