• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

இளம்பெண்ணை பாலியல் தொழிலுக்கு அழைத்த தரகர்; தட்டித் தூக்கிய போலீஸ்!..

By

Aug 21, 2021

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த சாக்கோட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் விழாவிற்கு வந்த இளம்பெண்களை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக தஞ்சாவூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சென்னை டிஜிபி அலுவலகம் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆகியவற்றுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், காரைக்குடி டி.எஸ்.பி வினோஜி தலைமையில் 4 குழுக்கள் அமைத்து புகார் அளித்த பெண்ணிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து வழக்கில் தொடர்புடையவர்களை விசாரணை செய்த காவல்துறையினர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த ராஜா என்பவரை கைது செய்து செய்தனர். காரைக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜாவை 15 நாள் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.