• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அடுக்குமாடி கட்டிடத்தை தாக்கிய ரஷ்ய படை..

Byகாயத்ரி

Feb 26, 2022

உக்ரைன் மீது ரஷியா நேற்று முன்தினம் படையெடுத்தது. அதன்படி, இன்று 3வது நாளாக பலமுனைகளில் இருந்து ரஷிய படைகள் தாக்கி வருகின்றன. நேற்று மட்டும் 200-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை ரஷியா நடத்தி உள்ளது என உக்ரைன் எல்லைப் பாதுகாப்பு படை தெரிவித்தது. உக்ரைன் தலைநகர் கீவில் நுழைந்த ரஷ்ய படைகள், ஆயுதங்களை கொண்டு பயங்கர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், கீவ் நகரில் உள்ள உயரமான அடுக்குமாடி குடியிருப்பின் மீது ரஷ்ய படை ஏவுகணை கொண்டு தாக்கியது. இதில், குடியிருப்பு சேதம் அடைந்துள்ளது. குடியிருப்புக்குள் சிக்கி இருக்கும் மக்களை மீட்கும் பணியும் நடைபெற்று வருகிறது.