• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

லதா ரஜினிகாந்த் அதிரடி! அப்போ தனுஷோட சினிமா கேரியர்?

தனுஷின் திரைப்படங்களை தயாரிக்க வேண்டாம் என லதா ரஜினிகாந்த், தயாரிப்பாளர்களிடம் கூறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ்.. இவரும் இவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும், கடந்த ஜனவரி 17-ஆம் தேதி பிரிவதாக அறிவித்தனர்..

இந்நிலையில், லதா ரஜினிகாந்த், தனுஷை வைத்து யாரும் படத்தை தயாரிக்க வேண்டாம் என அவருக்குத் தெரிந்த தயாரிப்பாளர்களை தொடர்புகொண்டு கூறி வந்ததாக தகவல் வெளியானது! இதற்கிடையே, கோலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் அன்புச்செழியன், தனது மகள் சுஷ்மிதாவின் கல்யாணத்துக்கு அழைப்பதற்காக ரஜினியின் வீட்டிற்குச் சென்றுள்ளார்!

அப்போது, லதா ரஜினிகாந்த் தன் மூத்த மகளான ஐஸ்வர்யாவின் வாழ்க்கை குறித்து கூறி வருத்தப்பட்டிருக்கின்றார். அன்புச்செழியனும் லதாவிற்கு ஆறுதல் கூறிவிட்டு சென்று விட்டார். லதா ரஜினிகாந்த் மேலும் தெரிந்த தயாரிப்பாளர்களுக்கு கால் செய்து தனுஷின் திரைப்படங்களை யாரும் தயாரிக்க வேண்டாம் என கூறியிருக்கின்றார். இந்நிலையில் தனுஷுக்கு தற்பொழுது நடிக்கும் திரைப்படங்களை தவிர புதிதாக திரைப்படங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு குறைவு என கூறி வருகின்றனர். தனுஷ் ஐஸ்வரியா விவாகரத்து குறித்து அறிவித்ததிலிருந்தே இது போன்ற செய்திகள் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.