• Mon. Sep 22nd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

வலிமை முதல்நாள் வசூலும் இரண்டாம் நாள் ஏற்படுத்திய மரணபயமும்..

இரண்டு வருடகாத்திருப்பு, அஜீத்குமார் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வலிமை படம் பிப்ரவரி 24 அன்று உலகம் முழுவதும் வெளியானது முதல்நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கே சிறப்புக்காட்சி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்தனர் தமிழகத்தில் சுமார் 75 கோடி வரை வியாபாரம் செய்யப்பட்ட வலிமை படத்தின் அதிகாலை சிறப்புக்காட்சிக்கான டிக்கட் சென்னை கோயம்பேடு திரையரங்கில் 1500 ரூபாய் , அசோக்நகர் காசி தியேட்டரில் 500 முதல் 1000ம் ரூபாய் வரைவிற்க்கப்பட்டது சென்னை தவிர்த்து பிற நகரங்களில் 500 முதல் 350 ரூபாய் வரைவிற்கப்பட்டது சேலம், வேலூர், கடலூர் பாண்டிச்சேரி பகுதிக்கு வலிமை படம் வாங்கிய விநியோகஸ்தர்கள் ஒப்பந்த அடிப்படையில் முழுமையாக பணத்தை செலுத்தாதால் இந்த மூன்று ஏரியாக்களுக்கு மட்டும் ஒரு நாள் மட்டும் படத்தை திரையிட அனுமதி வழங்கப்பட்டது தமிழ்நாடு முழுவதும் படம் திரையிடப்பட் தியேட்டர்களில் அஜீத்குமார் ரசிகர்கள் கூடி பட்டாசு வெடித்துகொண்டாடினார்கள் ஆனால் படம் தியேட்டர்களில் திரையிடப்பட்டு இடைவேளை முடிந்த உடன் வலிமை படத்திற்கு எதிரான விமர்சனங்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் வேகமாக பரவியது சிறப்புக்காட்சியை தவிர்த்து எல்லா திரையரங்கங்களும் 100% டிக்கட் விற்பனை ஆகவில்லை சென்னை போன்ற நகர்புறங்களில் டிக்கட்டை வாங்க ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் இருந்ததை போன்று புறநகர்களில் குறைவாகவே இருந்தது
அதேசமயம், முதல்காட்சி முடிந்ததிலிருந்தே படம் சரியில்லை என்பது பரவத் தொடங்கியபின் பகல் காட்சிக்கே பார்வையாளர்கள் வருகை குறைவாக இருந்தது விருதுநகரில் 550 இருக்கை வசதியுள்ள திரையரங்கில்.பகல் காட்சியில் 100 பார்வையாளர்களே படம் பார்த்துள்ளனர் சேலம் ஏரியாவில் உள்ள குமாரபாளையத்தில் மூன்று திரையரங்குகளிலும் இன்றுகாலை காட்சிக்கு 140 டிக்கட்டுகளே விற்பனையாகி உள்ளது
இருந்தபோதிலும்நேற்று முழுக்க திரையரங்குகளில் கூட்டம் பரவாயில்லாத அளவு இருந்திருக்கிறது. போட்டிக்கு படம் எதுவும் இன்றி நேற்று வெளியான வலிமை தமிழ்நாட்டில் மட்டும் 700க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியிடப்பட்டிருக்கிறது வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்களில்
சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கான மொத்த வசூலை எட்டிவிட வேண்டும் என்பதே தயாரிப்பு, விநியோகஸ்தர்கள, திரையரங்க உரிமையாளர்கள் கனவாக இருந்தது முதல் நாள் ரசிகர்களின், ஆர்வம் காரணமாக 700×5 லட்சம் = 35 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது அதேபோன்றுதான் தயாரிப்பு தரப்பிலிருந்து
முதல்நாளில் மட்டும் மொத்தமாக 35 கோடி வசூல்அதிகாரப்பூர்வமற்ற முறையில் சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையான வசூல் கணக்கு படம் வாங்கியுள்ள விநியோகஸ்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதுஉண்மையில் முதல்நாள் 27.50 கோடி ரூபாய்தான் டிக்கட் விற்பனை மூலம் வருவாய் கிடைத்திருக்கிறது இரண்டாம் நாளான நேற்று காலை மற்றும் மதியக்காட்சிகளுக்கு மூன்று இலக்கத்தில் டிக்கட் விற்பனையாவதே போராட்டமாக இருந்தது என்றனர் புறநகர் தியேட்டர் உரிமையாளர்கள்
பொதுவாகப டம் வெளியானஇரண்டாம்நாள் கூட்டம் குறையும் ஆனால் முதல் நாள் வசூலில் நான்கில் ஒரு பங்காக மோசமாக குறைந்து பயத்தை ஏற்படுத்தாது என்கின்றனர் தியேட்டர் தரப்பில்.