• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தொடரும் மர்ம மரணம்….. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பரபரப்பு!…

By

Aug 21, 2021

தேனி மாவட்டம் தேவாரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் விவசாய கூலி வேலைக்கு அங்குள்ள கிராம மக்கள் சின்னபாண்டி என்பவரது தோட்டத்துக்கு சென்றுள்ளனர் .

அங்கு காட்டு யானை ஒன்று மர்மான முறையில் இறந்து கிடந்ததை கண்டு காவல்துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்து பரிசோதித்ததில்
40 வயது மதிக்கத்தக்க பெண் யானை என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

யானை நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதா ? அல்லது வேறு காரணமா? என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேவாரம் பகுதியில் மக்னா என்ற யானை இதுவரையில் 12 க்கும் மேற்பட்டோரை அடித்துக் கொன்றுள்ள நிலையில், இறந்தது மக்னா யானையாக இருக்குமோ? என மக்கள் சந்தேகப்பட்டு வருகின்றனர்.