• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

வியக்க வைக்கும்
வெள்ளை காக்கா.., வைரல் வீடியோ-அரசியல் டுடேவில் பாருங்க!

மத்தவங்க பேச்சுக்கு….ஆமாம்..!! போட தெரிஞ்சவங்க… கண்டிப்பாக வானத்துல வெள்ள காக்கா பறக்குதுன்னு சொன்னா…அதற்கு உடனே தலையசைத்து ஆமாம்…! பறக்குதுன்னு சொல்லி ‘ஜால்ரா’ போட கத்துக்கணும். அப்போது தான் அவர் பிழைப்பு ஓடும்… இல்லை அவர் பாடு திண்டாட்டம் தான். அப்படிப்பட்ட வெள்ள காக்கா…. உண்மையிலேயே இருக்கா? இல்லையா? என இதுவரை பலருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது.

அப்படிப்பட்ட ‘அபூர்வ’ வெள்ளை காக்கா உண்மையாக இருந்தால், அதை பார்பவர்கள் கண்கள் புண்ணியம் செஞ்சிருக்க வேண்டும். அந்த புண்ணியம் இந்த வீடியோ (வெள்ளை காக்கா) பதிவை காண்பவர்களுக்கு கிடைக்கட்டும். சமீபத்தில் ஏதோ ஒரு ஊரில் (பெயர் தெரியவில்லை) ஒரு கட்டடத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த டூவீலர் மேல் ‘ஹாயாக’ அமர்ந்து அங்குமிங்குமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அந்த பக்கமாக சென்ற சிலர் ஆஹா….! வெள்ளை காக்கா என ஆச்சிரியப்பட்டு, பார்த்து ரசித்ததுடன், தனது கையில் வைத்திருந்த அலைபேசி மூலம் அந்த ஆபூர்வ வெள்ளை காக்காவின் அழகை வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ பதிவு தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. யாருக்கு புண்ணியம் கிட்டுதோ…இல்லையோ…கண்டிப்பாக வெள்ளை காக்காவை படம் (வீடியோ) எடுத்தவருக்கு கிட்டும் என நம்பிக்கையோடு..நாமும் சேர்ந்து வாழ்த்துவோமாக…..