• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

குமரியில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம்!…

By

Aug 20, 2021

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்த நாள் விழா இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டம், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவில் சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்தியின் திருவுருவச் சிலைக்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகரத் தலைவர் அலெக்ஸ் வர்த்தக காங்கிரஸ் தலைவர் குமரி முருகேசன், ராமன், லட்சுமணன். லாரன்ஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர். அதேபோல் மாணவர் காங்கிரஸ் கட்சி சார்பிலும் மாநகர தலைவர் பிரவின் ஜெப குமார் தலைமையில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.