• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அதிரடி காட்டிய அதிகாரிகள்..!

Byவிஷா

Feb 21, 2022

மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் இருந்த கடைகளை அகற்றுவதில் அதிகாரிகள் மும்முரம் காட்டியதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையில் உள்ள உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலின் புதுமண்டபம் பகுதியில் செயல்பட்டு வந்த கடைகளை அருகிலுள்ள குன்னத்தூர் சத்திரத்தில் இடமாற்றம் செய்யும் பணிகள் இன்று காலை மேற்கொள்ளப்பட்டன. இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் போலீசார் உதவியுடன் கடைகளை அகற்றும் பணிகள் அதிகாரிகள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.