• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அஜீத்குமாருடன் டூயட் இல்லையே! ஏக்கத்தை வெளிப்படுத்திய ஹீமா குரேஷி..

வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள வலிமை படம் பிப்., 24ல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் வெளியாகிறது. அதிரடி ஆக்க்ஷன் படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும், இந்தி நடிகை ஹூமா குரேஷி முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர் ஹூமா குரேஷி அளித்த பேட்டி யில் ‛‛வலிமை படத்தில் முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடித்துள்ளேன். எனக்கு பைக் மிகவும் பிடிக்கும், இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பைக் சாகச காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவரும். வசனங்கள் பேச இயக்குனர் வினோத் உதவினார். அதேபோன்று படப்பிடிப்பு தளத்திலும் அஜித் உதவினார். முதல்நாளே அவருடன் நடிக்க சுலபமாக இருந்தது. இந்த படத்தில் அஜித் உடன் டூயட் பாடாதது, வருத்தமாக உள்ளது. காலா படத்திற்கு பின் நிறைய வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்தேன். இயக்குனர்கள் வாய்ப்பு தந்தால் தமிழில் தொடர்ந்து நடிக்க நான் தயாராக உள்ளேன். தமிழ், இந்தி படங்கள் இரண்டில் நடிப்பதற்கு வித்தியாசம் தெரியவில்லை. எந்த மொழியிலும் நடிப்பு மட்டுமே பேசும்’ என்றார்.