• Tue. Apr 30th, 2024

புர்கா அணியாத பெண்கள் மீது தாலிபான் படையினர் துப்பாக்கிச் சூடு – 3 பேர் உயிரிழப்பு!..

By

Aug 19, 2021

புர்கா அணியாத பெண்கள் மீது தாலிபான் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.


ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.தற்போது தலிபான்கள் ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதன் காரணமாக ஆப்கன் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கனிலிருந்து வெளியேறி வருகின்றனர்.

ஆப்கானில் இனி சண்டை நடக்காது, அமைதி நிலவும் என்று தலிபான்கள் உறுதியளித்துள்ளனர். இதனிடையே இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்கா முகத்தை முழுவதுமாக மூடக்கூடிய ஓர் ஆடை ஆகும். இஸ்லாமிய பெண்கள் தங்கள் தலை மற்றும் முகத்தை வெளியே காட்டக்கூடாது என இஸ்லாமிய ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருவர். இஸ்லாமிய மார்க்கத்தில் மிகவும் பற்று கொண்ட தாலிபான் அமைப்பினர் காபூல் விமான நிலையம் அருகே பெண்கள் சிலர் தலையில் புர்கா அணியாததால் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.இது உலகம் முழுவதும் கண்டனத்தை பெற்றுள்ளது.


இதற்கு மத்தியில் ஜலாலாபாத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தாலிபான்கள் தங்கள் கொடியை அரசு அலுவலங்களில் பயன்படுத்தக் கூடாது என்றும் ஆப்கன் தேசிய கொடியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் கூறினர்.அப்போது தாலிபான்கள் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர்.பலர் படுகாயம் அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *