• Sat. Sep 13th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ஹாலிவுட்டை கலக்கிய தமிழ் ஹீரோக்கள்!

தமிழ் சினிமாவில் கொடிக்கட்டிப்பறந்த சில நடிகர், நடிகைகள் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளனர். அதில் நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களிலும் நடித்து பெயர் பெற்றுள்ளனர்!

எம் என் நம்பியார்:
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் நம்பியார். இவர் 1952இல் தி ஜங்கிள் என்ற ஆங்கிலப் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் ராட் கேமரூன், சீசர் ரோமெரோ, மேரி வின்ட்சர் மற்றும் எம் என் நம்பியார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்தை தி மாடர்ன் தியேட்டர்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்திருந்தது.

பிரகாஷ்ராஜ்:
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மொழிகளில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் பிரகாஷ்ராஜ். ஹாலிவுட்டில் 1993 இல் வெளியான டிராபிகல் ஹீட் என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மாதவன்:
தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என ரசிகைகளால் அழைக்கப்படுபவர் நடிகர் மாதவன். இவர் மலையாளம், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்துள்ளார். மாதவன் 1997இல் ஹாலிவுட் படமான இன்ஃபெர்னோ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் ரவியாக மாதவன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு 2004 இல் நத்திங் பட் லைஃப் என்ற ஆங்கிலம் மற்றும் மலையாளத் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து 2015 இல் வெளியான நைட் ஆஃப் தி லிவிங் டெட் என்ற ஹாலிவுட் படத்தில் டாமுக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளார் மாதவன்!

ரஜினி:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 1988 ஆம் ஆண்டு டென்னிஸ் ஜாம்பவான் அசோக் அமிர்தராஜ் இணைந்து தயாரித்த ப்ளட்ஸ்டோன் என்ற சிறிய அமெரிக்க திரைப்படத்தில் நடித்து இருந்தார். இப்படம் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.

நெப்போலியன்:
தமிழ் சினிமாவில் கிராமத்து சாயலில் படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நெப்போலியன். இவர் ஹாலிவுட்டில் முதல் முதலில் டெவில்ஸ் நைட் என்ற ஹாரர் திரில்லர் படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு கிறிஸ்மஸ் கூப்பன் என்ற ஹாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த ஆண்டு ஒன் மோர் ட்ரீம் மற்றும் டிராப் சிட்டி என்ற இரண்டு ஹாலிவுட் திரைப்படங்கள் நெப்போலியனுக்கு வெளியாக உள்ளது.

தனுஷ்:
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் பாலிவுட், ஹாலிவுட் என அனைத்திலும் கால் பதித்துள்ளார். தனுஷ் 2018 இல் தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்திருந்தார். தற்போது ஆண்டனி மற்றும் ஜோ ருஸ்ஸோ இயக்கத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ரியான் கோஸ்லிங் மற்றும் கிறிஸ் எவன்ஸ் ஆகியோருடன் தி கிரே மேன் என்ற படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.