• Tue. Apr 30th, 2024

திருச்செந்தூர் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.1.76 கோடி..!

By

Aug 19, 2021

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இம்மாத உண்டியல் வருமானம் ரூ.1.76 கோடி..!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த மாத உண்டியல் வருமானம் ரூ.1.76 கோடி கிடைத்துள்ளது. மேலும் 1¼ கிலோ தங்கமும் கிடைத்துள்ளது.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல்கள் மாதந்தோறும் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த மாதத்தில் கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி தலைமையில் தக்கார் பிரதிநிதியும், ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன் முன்னிலையிலும் உண்டியல் எண்ணும் பணி நேற்று முன்தினம் தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது. இதில், உதவி ஆணையர் செல்வராஜ், குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவில் உதவி ஆணையர் கண்ணதாசன், அறநிலையத்துறை ஆய்வாளர்கள் முருகன், இசக்கிசெல்வம், பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி ஓதுவார், மோகன், சுப்பிரமணியன், கருப்பன், சிவகாசி பதினென்சித்தர் மடம் குருகுலம் வேதபாடசாலை உழவாரப்பணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.


மேற்படி உண்டியல்கள் எண்ணப்பட்டதில், நிரந்தர உண்டியல்கள் மூலம் ரூ.1 கோடியே 73 லட்சத்து 45 ஆயிரத்து 160-ம், தற்காலிக உண்டியல்கள் மூலம் ரூ.2 லட்சத்து 74 ஆயிரத்து 319-ம் ஆக மொத்தம் ரூ.1 கோடியே 76 லட்சத்து 19 ஆயிரத்து 479 கிடைத்தது. அதேபோல், தங்கம் 1,250 கிராம், வெள்ளி 30,350 கிராம், 261 வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளும் கிடைத்தன.


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பெரும்பாலான வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 13-ம் தேதியில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து 3 நாட்களுக்கு பிறகு 16-ம் தேதி காலையில் திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். அதைத் தொடர்ந்து நாளை 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை பக்தர்களுக்கு மீண்டும் தடை விதிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *