• Sat. Sep 13th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ரசிகர்களின் ரெக்வெஸ்ட் அக்செப்டெட்! நடிகையானார் பாடகி!

அரபிக்குத்து பாடலை பாடிய ஜோனிட்டா காந்தி கதாநாயகியாக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அரபிக்குத்து பாடலை அனிருத்துடன் இணைந்து பாடிய ஜோனிட்டா காந்தி பாடி உள்ளார். இந்த லிரிக் வீடியோவில் பூஜா ஹெக்டேவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் படுகிளாசாக உள்ளார் ஜோனிட்டா.

இந்த வீடியோவை பார்த்த விஜய்யின் ரசிகர்கள், இவரே நடித்திருக்கலாமே என்று இணையத்தில் கருத்து தெரிவித்து வந்தனர்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய்யின் அட்டகாசமான நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் தயாராகி வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அவருடன் யோகிபாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு, பீஸ்ட் படத்தில் இருந்து முதல் சிங்கிள் லிரிக் வீடியோ வெளியானது. அனிருத் இசையில், சிவகார்த்திகேயன் வரிகளில் அரபிக்குத்து பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே யூடியூப்பில் டிரெண்டானது. இந்த பாடலை அனிருத்துடன் இணைந்து பாடிய ஜோனிட்டா காந்தி, புது டெல்லியில் பிறந்து, கனடாவில் செட்டிலானார். இவரை ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், முதன்முதலில் திரையில் அறிமுகம் செய்துவைத்தார். மணிரத்தினம் இயக்கத்தில் உருவான ஓ காதல் கண்மணி படத்தில் வரும் மனம் மனம் மென்டல் மனமே பாடலை பாடி இளசுகள் மனதில் இடம் பிடித்தார். இதையடுத்து காற்றுவெளியிடை, வேலைக்காரன், டாக்டர் போன்ற படங்களில் பாடி உள்ளார். டாக்டர் திரைப்படத்தில் அனிருத்துடன் இணைந்து ஜோனிடா பாடிய செல்லம்மா செல்லம்மா மிகக்பெரிய அளவில் ஹிட்டடித்தது.

இந்நிலையில், பாடகியாக வலம் வரும் ஜோனிட்டா காந்தி, விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் உருவாக உள்ள ”walking talking strawberry ice cream” படத்தில் ஹீரோயினா அறிமுக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்த கிருஷ்ணா குமார் கதாநாயகனாக நடிக்கிறார். விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குநராக இருந்த விநாயக் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் சென்னையில் நடைபெறவுள்ளது.