• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

போராட்டமே வாழ்க்கையாகி விட்டது – சீமான் வேதனை

நாம் தமிழர் கட்சியின் 60-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை கடத்தி வாபஸ் பெற வைத்துள்ளனர்.
சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியபோது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேர்மையான முறையில் நடந்த வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் முறை தடுத்து நிறுத்தபட வேண்டும். திமுகவை விட்டால் அதிமுக, அதிமுகவை விட்டால் திமுக என்ற நிலை மாற வேண்டும்.

நகர்ப்புற தேர்தலில் தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது. நாம் தமிழர் வேட்பாளர்கள் மிரட்டப்படுகிறார்கள். நாம் தமிழர் கட்சியின் 60-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை கடத்தி வாபஸ் பெற வைத்துள்ளனர். நாம் தமிழர் கட்சிக்கு போராட்டமே வாழ்க்கையாகி விட்டதாக தெரிவித்தார்.
ஆட்சி மாற்றம், ஆள் மாற்றத்திற்காக வரவில்லை, அமைப்பு மாற்றத்திற்காக வந்திருக்கிறோம். கோயில் கருவறையில் இருந்து தாயின் கருவறை வரை லஞ்சம் என தெரிவித்தார்.