• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

உபி திருமண விழாவில் 13 பலியான சம்பவம்…பிரதமர் மோடி இரங்கல்

குஷிநகரில்,திருமண நிகழ்ச்சியின் போது,கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம்,குஷிநகர் மாவட்டத்தில்,நேற்று இரவு நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியின் போது,அங்கிருந்த கிணற்றின்மீது இருந்த இரும்பு வளையத்தில் சிலர் நின்று கொண்டிருந்த நிலையில்,அவர்கள் கிணற்றில் தவறி விழுந்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.அதிக பாரத்தால் இரும்பு வளையம் உடைந்து கிணற்றுக்குள் விழுந்தவர்களில் 13 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.மேலும்,இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து,உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து,உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்குவதாக குஷிநகர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில்,கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
“உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் நடந்த விபத்து நெஞ்சை உலுக்குகிறது.

இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உள்ளாட்சி நிர்வாகம் அனைத்து உதவிகளிலும் ஈடுபட்டுள்ளது”,என்று தெரிவித்துள்ளார்.