• Sun. Sep 28th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

அடுத்தவர் மனைவியுடன் மாஜி எம்.எல்.ஏ உல்லாசம் .. கணவருக்கு அடி உதை

கன்னியாகுமரி முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் பாலியல் சம்பந்தப்பட்ட வழக்கில் சிக்கியிருப்பது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரியில் வீட்டில் இருந்த பெண்ணுடன் தனிமையை கழித்த முன்னாள் அ.தி.மு.க எம்எல்ஏ ஜன்னலை உடைத்து பார்த்த பெண்ணின் கணவரை தாக்கி தப்பிய நிலையில் பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு.
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அடுத்த திருவிடைக்கோடு பகுதியை சேர்ந்தவர் குமார். கூலித்தொழிலாளியான குமாருக்கு திருமணமாகி விஜயஸ்ரீ என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். வேலைக்கு சென்ற குமார் கடந்த 11-ம் தேதி இரவு வேலையை முடித்து வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் முன்பு கார் ஒன்று நின்றுள்ளது. அவரது வீட்டு கதவும் பூட்டப்பட்டிருந்தது. குமார் பல முறை கதவை தட்டிய போதும் மனைவி விஜயஸ்ரீ திறக்காத நிலையில் சந்தேகமடைந்து அறை ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

முன்னாள் அ.தி.மு.க எம்எல்ஏ-வான நாஞ்சில் முருகேசனுடன் அவரது மனைவி விஜயஸ்ரீ தனிமையில் இருப்பதை கண்டு அதிர்ந்துப்போனார். ஜன்னல் உடைக்கும் சத்தம் கேட்டு வீட்டு கதவை திறந்து வேகமாக வந்த முன்னாள் அ.தி.மு.க எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் தகாத வார்த்தைகளால் குமாரை வசைப்பாடியுள்ளார். மேலும் தனது கார் டிரைவர் மகேஷ் என்பவருடன் சேர்ந்து இங்கு எதற்கு வந்தாய் எனக் கேட்டு குமாரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றுள்ளார்.

இதில் காயமடைந்த குமார் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இரணியல் காவல் நிலையத்தில் குமார் புகார் அளித்தார். அந்தப்புகாரில், ‘தான் கூலி வேலை செய்து வருவதாகவும் எனது மனைவி விஜயஸ்ரீக்கும், அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் என்பவருக்கும் பல வருடங்களாக தவறான உறவு இருந்து வந்ததாகவும் தான் வேலைக்கு நாகர்கோவில் சென்று விடும் நிலையில் முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் எனது வீட்டிற்கு வந்து செல்வார் என்றும் சம்பவத்தன்று நான் அவர்கள் தனிமையில் இருப்பதை நேரில் பார்த்ததால் ஆத்திரமடைந்து நாஞ்சில் முருகேசனும் அவரது டிரைவர் மகேஷ் இருவரும் சேர்ந்து தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக” தெரிவித்துள்ளார்.

புகாரின் பேரில் கொலை மிரட்டல் உள்ளிட்ட 3-பிரிவுகளின் கீழ் நாஞ்சில் முருகேசன் மற்றும் அவரது கார் டிரைவர் மகேஷ் மீது வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனை வலைவீசி தேடி வருகின்றனர்.நாஞ்சில் முருகேசன் ஏற்கனவே 16-வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறைக்கு சென்று பிணையில் வெளிவந்த நிலையில் தற்போது அஇஅதிமுக சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வேட்பாளராக தனது மகளை களமிறக்கு தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் மேலும் ஒரு பாலியல் சம்பந்தப்பட்ட வழக்கில் சிக்கியிருப்பது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.