• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மீம்ஸ்களால் சி.எஸ்.கே வை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்..!

ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதனை அடுத்து, தொடருக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் வரும் பிப்ரவரி மாதம் 12, 13-ம் தேதிகளில் நடைபெறும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல் நாள் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. முதல் நாள் மெகா ஏலத்தில் 161 வீரா்களின் பெயர்கள் இடம் பெற்றன.

வெளிநாட்டு வீரர்களை வாங்குவதில் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இரண்டாம் நாளாக இன்று காலை மீண்டும் வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனிடையே, ஏலம் எடுக்கும் அணிகளையும், வீரர்கள் குறித்தும் நெட்டிசன்கள் மீம்ஸ்களை சமூகவலைதளங்களில் தெறிக்கவிட்டனர். குறிப்பாக சென்னை ரசிகர்கள் தாங்கள் எதிர்பார்த்தை வீரர்களை எடுக்காததால், அதனை கிண்டலடித்து மீம்ஸ்களை உருவாக்கினார்கள். அந்த மீம்ஸ் சமூகவலைதளங்களில் செமயாக வைரலானது.