• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

ஊ சொல்றியா மாமா.. .ஊ ஊ சொல்றியா மாமா…மணப்பெண்ணின் குத்தாட்டம்

Byகாயத்ரி

Feb 11, 2022

உலகின், எங்கோ ஒரு மூலையில் நெகிழ்ச்சியான, சில விசித்திரமான,வேடிக்கையான, சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. இன்றைய நவீன உலகில், பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள எல்லாவற்றிக்கும் ஆன்லைனில் பதிவிடுவது, ட்ரெண்ட் ஆகிவிட்டது. அவை சில சமயங்களில், நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும், சில வீடியோ நமக்கு கோபத்தை தூண்டும், சிலவற்றை வேடிக்கையாக கடந்து செல்வோம்.

முன்பெல்லாம், நம் முன்னோர்கள் வழி திருமணத்திற்கு தயாராகும் பெண்கள், குனிந்த தலை நிமிராமல் வந்து மணமேடையில் உட்காருவார். அது அந்த காலம். இப்போ மணப்பெண் குத்தாட்டம் போட்டா தான் கல்யாணமே நடக்கின்றது. இன்றைய மேற்கத்திய கலாசாரத்தில், மணமேடைக்கு வரும் போதே ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் தான். இது போன்ற வீடியோக்கள் ஏராளமானவை சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது, மணப்பெண் குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அல்லு அர்ஜூன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது புஷ்பா திரைப்படம். புஷ்பா திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும், மற்ற பிரபலங்கள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா, பாடல் பட்டையை கிளப்பிவிட்டது. இந்த பாடலுக்கு வீடியோ போடாதவர்களே இல்லை அந்த வரிசையில் திருமணத்தில் மணப்பெண்ணும் மணமகனும் ஒன்றாக இப்பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் சக்கைப்போடு போட்டுள்ளது.

https://www.instagram.com/reel/CZd7up3J_HJ/?utm_source=ig_web_copy_link