• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஹே சினாமிகா’ படத்தின் ‘மேகம்’ பாடல் வெளியானது..!

ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடன இயக்குநரான பிருந்தா இயக்கியுள்ள ‘ஹே சினாமிகா’ திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் துல்கர் சல்மான் மற்றும் அதிதி ராவ் நடித்திருக்கும் ‘மேகம்’பாடல்வெளியாகியுள்ளது.நகைச்சுவை கலந்த காதல் படமான ‘ஹே சினாமிகா’-வில் இடம் பெறும் இந்த முதல் பாடலை கோவிந்த் வசந்தா பாடி இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.எண்ணற்ற திரைப்பட பாடல்களுக்கு நடனம் அமைத்து திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள பிருந்தா இந்த ‘ஹே சினாமிகா’ படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குநராகியுள்ளார்.
இப்படத்தில், துல்கார் சல்மான், அதிதி ராவ் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த ‘மேகம்’ பாடல் குறித்து இயக்குநர் பிருந்தா மாஸ்டர் பேசும்போது, “96’ படத்தின் மூலம் ஒரே இரவில் தமிழ் திரையுலகில் பிரபலமான கோவிந்த் வசந்தா இந்த ‘மேகம்’ பாடலை உற்சாகமிக்க கீதமாக உருவாக்கியுள்ளார்.தாய்க் குடம் பிரிட்ஜ் இசைக் குழுவின் முன்னணி பாடகராகவும் வழிகாட்டியாகவும் நாங்கள் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவை அறிந்திருந்தோம்.
மேடையில் அவர் பல முறை வழங்கிய தாய்க் குடம் பிரிட்ஜின் மலையாள ஃபிஷ் ராக் பாடலை நாங்கள் மிகவும் விரும்பினோம், அந்த டியூனில் ஒரு பாடலை உருவாக்கி பாடலின் அதே ஆற்றலைக் கொண்டு வர விரும்பினோம். அதன்படியே இந்தப் பாடல் உருவாகியுள்ளது.
படத்தின் முதல் பாடல் இதுவாகும். நீங்கள் காதல் கீதங்களின் ரசிகராக இருந்தால், நிச்சயமாக உங்களால் ‘மேகம்’ பாடலை மிஸ் செய்ய முடியாது.” என்றார்.
இந்த ‘ஹே சினாமிகா’ திரைப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் 2022 மார்ச் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.