• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

5 வருஷத்துல, 655 “டிஸ்கால்….!” – என்கவுன்ட்டர் அறிக்கை வெளியீடு!

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 655 என்கவுன்ட்டர் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!

மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராயிடம், கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்ற என்கவுண்டர்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.

நித்யானந்த் ராய் பதிலில் கொடுக்கப்பட்ட தரவுகளின்படி, ஜனவரி 1, 2017 முதல் ஜனவரி 31, 2022 வரை சத்தீஸ்கரில் 191, உத்தரபிரதேசத்தில் 117, அசாமில் 50, ஜார்கண்டில் 49, ஒடிசாவில் 36 மற்றும் ஜம்மு-காஷ்மீரில் 35, மகாராஷ்டிராவில் 26, பீகாரில் 22, ஹரியானாவில் 15, தமிழகத்தில், தெலுங்கானா, மத்திய பிரதேசம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் தலா 14 , ஆந்திரா மற்றும் மேகாலயாவில் தலா 9 மற்றும் ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் தலா 9 என்கவுண்டர் சம்பவங்கள் நடந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.