• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஃபர்ஸ்ட் ஹீரோயின்..இப்போ பாடகி..அப்பா என்ன ஸ்பீடு..!

Byகாயத்ரி

Feb 8, 2022

இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி, சூர்யா தயாரித்துள்ள ‘விருமன்’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார். முத்தையா இயக்கியுள்ள இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில் தெலுங்கில் வருண் தேஜ் நடிக்கும் ‘கணி’ படத்தில் இவர்ஒரு பாடல் பாடியுள்ளார். தமன் இசையமைத்துள்ள இந்தப் பாடல் இன்று வெளிகிறது. இயக்குநர் ஷங்கர் தனது ‘பாய்ஸ்’ படத்தில் இசையமைப்பாளர் தமனை நடிகராக அறிமுகப்படுத்தினார் என்பதும், ஷங்கர் தயாரித்த ‘ஈரம்’ படத்தில் தான் தமன் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.தற்போது இயக்குநர் ஷங்கரின் மகளை தமன் பாடகராக அறிமுகப்படுத்தவிருக்கிறார். மருத்துவம் படித்துள்ள அதிதி, சில மாதங்களுக்கு முன் பட்டம் பெற்றார்.

https://www.instagram.com/p/CZooToOlMhZ/?utm_source=ig_web_copy_link