• Fri. Oct 17th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

போக்குவரத்து ஜாம்பவன் நிறுவனமான ஓலா தனது மின் ஸ்கூட்டர் ரகங்களை இன்று அறிமுகம் செய்துள்ளது!…

By

Aug 15, 2021

சமீபத்தில் ஓலா நிறுவனம் தனது ஓலா ஸ்கூட்டருக்கான முன்பதிவை ஆரம்பித்தது. 499 ரூபாய் செலுத்தி வாடிக்கையாளர்கள் தங்கள் ஓலா ஸ்கூட்டரை olaelectric.com தளத்தில் முன்பதிவு செய்யலாம் என்றும் இந்த தொகை திருப்பிச் செலுத்தக்கூடிய வைப்புத்தொகையாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருந்தது. இந்த முன்பதிவு தொடங்கிய ஒரே நாளில் 1,00,000 முன்பதிவுகளைப் பெற்றது. இந்நிலையில் அறிவித்தப்படி, மின் ஸ்கூட்டர் ரகங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ஓலா நிறுவனம்.

Ola S1 மின் ஸ்கூட்டர் ரூ.99,999 எனும் விலையிலும், Ola S1 Pro ரூ.1,29,999 எனும் விலையிலும் கிடைக்கும் என ஓலா அறிவித்துள்ளது. ஓலா நிறுவனம் மின்வாகனத் தயாரிப்பில் பெரிய அளவில் திட்டமிட்டு தமிழகத்தின் ஓசூர் அருகே உற்பத்தி ஆலையை அமைத்துள்ளது. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான ஆன்லைன் பதிவு அண்மையில் தொடங்கி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ஓலா தனது மின்ஸ்கூட்டர்களை இன்று நண்பகல் அறிமுகம் செய்தது.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில், போக்குவரத்துத் துறையில் ஒரு புரட்சி தேவை என்றும், பெட்ரொலில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்றும் ஓலா தெரிவித்துள்ளது. மின் ஸ்கூட்டர் விற்பனை இந்திய ஆலையில் இருந்து தொடங்குவதாகவும் ஓலா தெரிவித்துள்ளது.
ஓலா ஸ்கூட்டர்கள் பிரத்யேகமான சிப்களை கொண்டிருப்பதாகவும், வாகன ஓட்டிகள் விரும்பிய வாகன ஒலியை தேர்வு செய்து கொள்ளும் வசதியும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசையை கேட்டு ரசிக்கும் வகையில் ஸ்பீக்கர்களும் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் தகவல்களை அளிக்கும் மேப் வசதியும் உள்ளடக்கியுள்ளது. ஸ்கூட்டர் தொடர்புடைய செயலி மூலம் இவற்றை இயக்கலாம். மூவ் ஓ.எஸ் எனும் புதிய பிரத்யேக ஆப்பரேட்டிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. ஓலா ஸ்கூட்டர்களை குரல் மூலமும் கட்டுப்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிவர்ஸ் மோடு வசதியும் பெற்றுள்ளது.
இந்த ஸ்கூட்டர் 3 விநாடிகளில் பூஜ்ஜியத்தில் இருந்து 40 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. பத்து வகையான வண்ணங்களில் கிடைக்கும் இந்த ஸ்கூட்டர்கள் 115 கிமி வேகத்தில் செல்லக்கூடியது. ஒரு முறை சார்ஜ் செய்தால், 181 கிமீ வரை செல்லலாம்.


ஓலா மின் ஸ்கூட்டர் தொடர்பான அறிமுக விவரங்கள் டிவிட்டரில் வீடியோ மூலம் விளக்கமாக வெளியிடப்பட்டுள்ளன. அக்டோபர் முதல் வாகனங்கள் விற்பனைக்கு வருகின்றன.