• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஐஏஎஸ் போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் 22 வயது இளம் மாணவி மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டி

Byகுமார்

Feb 4, 2022

மதுரை கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகனா. 22 வயதான இவர் எம்ஏ பட்டம் பெற்று தற்பொழுது ஐஏஎஸ் போட்டி தேர்வுக்கு தயாராகி வருகிறார்.

இந்நிலையில் மாணவி மோகனா மதுரை மாநகராட்சி 28வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தார்.

சிறு வயது முதல் மக்களின் அடிப்படை வசதி, மக்களின் வளர்ச்சி மேம்பாட்டில் தனது பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற கனவோடு ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகி வருவதாக கூறும் மாணவி மேனகா தேர்வெழுத இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு மக்கள் சேவையை செய்யும் வாய்ப்பை பெறும் முயற்சியாக தேர்தலில் போட்டியிடுவதாகவும் தன்னை போன்ற இளம் பெண்கள் தயக்கம் இல்லாமல் அரசியலுக்கு வந்து மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.