• Mon. Oct 27th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

அதிமுகவை பங்கம் செய்யும் பாஜக பதுங்கும் எடப்பாடி – பன்னீர்செல்வம் வகையறா

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சசிகலாவின் வருகையால் அதிமுகவில் உட்கட்சி குழப்பம் ஏற்பட்டது. இதை தனக்கு சாதகமாக்கி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க இறங்கிய பாஜக திடீரென யாரும் எதிர்பாராத வகையில் அதிமுகவை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.


மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்ததால் அதிமுகவின் தோள் மீது ஏறிக்கொண்டு சவாரி செய்ய தொடங்கியது. கை காட்டும் திசைகளில் மட்டுமே பயணிக்க முடியும் என்ற இக்கட்டான நிலை அதிமுகவுக்கு உருவானது.


இதனால் முதல்வர், துணை முதல்வர் பதவிகளில் இருந்த எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பாஜகவுக்கு பல்லக்கு தூக்கி வந்தனர். இதை பயன்படுத்திக்கொண்ட பாஜக அதிமுகவை எந்தளவுக்கு கேவலப்படுத்த முடியுமோ? அந்தளவுக்கு அதிமுகவை வச்சி செய்து தனது அரசியல் விளையாட்டை தொடங்கியது.


இதை தமிழக மக்கள் நகைச்சுவையாக பார்த்தனர் ஆனால் அதிமுகவினர் ரொம்ப பெருமையாக பிதற்றிக் கொண்டு திரிந்தனர். இந்த சூழலில், அதிமுகவின் ஆண்மையை துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி போகிறபோக்கில் சோதித்து பார்த்தார் பாஜகவிடம் அடிமையாக இருந்தஅதிமுகவில் குருமூர்த்தியின் பேச்சுக்குபலத்த எதிர்ப்பு கிளம்பாததால் ஆளாளுக்கு அதிமுகவை துவைத்து காய போட்டனர்.

ஆனாலும் எந்த சலனமும் இல்லாமல் சித்தப்பா சிவனேனு ஆட்சி முடிவதற்குள் முடிந்தவரை ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி கல்லா கட்டி வந்தனர் அதிமுக தரப்பில் இந்த சூழலில் அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு தாவியுள்ள நயினார் நாகேந்திரன் சமீபத்தில் அதிமுகவை கேட்ட ஒற்றை வார்த்தை ஒட்டுமொத்த தொண்டர்களை மட்டுமல்ல தமிழக அரசியல் அரங்கையே அதிர வைத்ததுசென்னைவள்ளுவர்
கோட்டத்தில் சமீபத்தில் பாஜ சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தில் பாஜக மாநில துணை தலைவரும், எம்.எல்.ஏவுமான நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு பேசினார்.அப்போது தமிழக சட்டமன்றத்தில் இப்போது வரை அதிமுக ஒரு எதிர் கட்சியாக செயல்படவில்லை.

அப்படி செயல்படுவதையும் பார்க்க முடியவில்லை. அதிமுக கட்சி எப்போதும் சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனை பற்றி, பேசுவது இல்லை.எதிர்க்கட்சியாக இல்லாவிட்டாலும் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மட்டும் துணிச்சலோடு செயல்படுகிறார். தைரியமாக ஊடகங்களுக்கும், பேட்டி கொடுக்கிறார். தமிழக சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேச ஒரு அதிமுக எம்எல்ஏ கூட இல்லை என்று பேசி இருந்தார்.


நயினார் நாகேந்திரனின் பேச்சு அதிமுகவுக்கு அதிர்ச்சியையும், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு மாவட்டத்தில் இருந்து கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கும் நிலையில் அதிமுகவை அதன் கூட்டணி கட்சியான பாஜக வேற லெவலுக்கு பங்கம் செய்து இருப்பதை ஜீரணிக்க முடியாமல் கட்சி தொண்டர்கள் தவித்து வருகின்றனர்.வந்தவர்கள்.. போனவர்கள்.. எல்லாம் கட்சியை நாறடிக்கிறார்கள்.

இனியும் கூட்டணியில் பாஜகவை வைத்துக்கொள்வது நல்லது இல்லை என்ற வகையில் தமிழகம் முழுவதும் எதிர்ப்பு குரல் வலுத்துள்ளதால் அதிமுகவில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது.அதே சமயம், அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை விரட்ட வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதை ஆமோதிக்கும் வகையில் அதிமுக தலைமை யோசிக்க தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.இதை அறிந்த பாஜக முந்திக்கொண்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உடனே சீட் ஒதுக்குமாறு, டெல்லி மூலம் உத்தரவு பிறப்பிக்க செய்து அதிமுகவை தெறிக்க விட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் பறக்கின்றன.


டெல்லி உத்தரவை மீறி ஒன்றுமே செய்ய முடியாது என்பது ஓபிஎஸ், எடப்பாடி இருவருக்கும்நன்றாக தெரியும். எனவே பாஜகவை திருப்திப்படுத்தும் வகையில் சீட்டுகளை ஒதுக்க அதிமுக மேலிடம் பணிகளை முடுக்கி விட்டுள்ளதாக, நம்பத்தகுந்த வட்டாரங்கள் காதை கடிக்கின்றன.