• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

நகர்புறத் தேர்தலுக்காக 11 பறக்கும் படை அமைப்பு- மதுரை மாவட்ட ஆட்சியர்

Byகுமார்

Jan 28, 2022

மதுரை மாவட்டத்தில் நகர்புற தேர்தலில் தேர்தல் வீதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 11 பறக்கும் படை அமைப்பு, ஒற்றைசாளர முறையில் பிரச்சார அனுமதி அளிப்பது குறித்த ஆலோசிக்கப்பட்டுவருகின்றது மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் பேட்டி.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் கூறுகையில் :

மதுரை மாவட்டத்தில் 16 இடங்களில் வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது, வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளது, தேர்தல் விதிமுறைகள் குறித்து கண்காணிக்க மாவட்டம் முழுதும் 11 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது எனவும், மாவட்டத்தில் தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன,

மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவுக்கு 4 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது எனவும், வாக்குசேகரிப்பின் போது 3பேர் மட்டுமே அனுமதி, மேலும் ஒற்றைசாளர முறையில் பிரச்சார அனுமதி அளிப்பது குறித்த ஆலோசிக்கப்பட்டு வருகிறதாகவும் தேர்தல் விதிமீறல் புகார் குறித்து 1800 425 7861 என்ற டோல்ப்ரீ் எண்ணில் புகார் அளிக்கலாம் எனவும்,50ஆயிரத்திற்கும் மேல் பணம் கொண்டுசெல்லக்கூடிய நபர் உரிய ஆவணங்களுடன் கொண்டுசெல்ல வேண்டும்,

மாற்றுத்திறனாளிகள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு உரிய பாதுகாப்பு நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சுவரொட்டிகள், சிலைகள் மூடப்படுவது விளம்பரங்கள் அகற்றுவது பணிகள் இன்று நிறைவுபெறும் ,தேர்தல் பணியில் ஈடுபடகூடிய அனைவரும் முன்களப்பணியாளர்களாக கருதப்பட்டு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.