• Wed. Jan 7th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நாகினி நடிகை மௌனி ராய்-ன் கோலாகலமான திருமண விழா

Byகாயத்ரி

Jan 27, 2022

பாலிவுட் சினிமாவில் ஒரு தொடர் படு பிரபலமாக ஓடியது. பாம்பின் கதையை வைத்து 5 சீசன்களுக்கு மேல் வெவ்வேறு கதைக்களத்தில் ஒளிபரப்பி இருக்கிறார்கள்.

விரைவில் 6வது சீசனும் வர இருக்கிறது, அதற்கான புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி இருந்தது. இந்த நாகினி தொடர் மூலம் தமிழ் மக்களுக்கும் நன்கு பரீட்சயப்பட்ட நடிகையாக மாறியவர் மௌனி ராய்.இவர் எல்லா இளைஞர்களின் மனதையும் கொள்ளைகொண்ட ஒரு சீரியல் நடிகை.

தமிழிலும் இவருக்கு நல்ல ரசிகர்கள் பட்டாளம்.தற்போது இவருக்கு இன்று கோலாகலமாக கோரள முறைப்படி திருமணம் நடந்துள்ளது. மௌனி ராய் சுராஜ் நம்பியார் என்பவரை தான் காதலித்து திருமணம் செய்துள்ளார்.

துபாய் தொழிலதிபரான சுராஜ், மௌனி ராயை முதன்முதலில் 2019ம் ஆண்டு புத்தாண்டு அன்று தான் சந்தித்துள்ளார்.அப்போது இருவருக்கும் காதல் மலர மெல்ல இது திருமணம் வரை சென்றுள்ளது. இந்த காதல் ஜோடி இன்று மகிழ்ச்சியுடன் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.இதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.