• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

லெஹங்காவில் சமூக வலைத்தளத்தை தடுமாற வைத்த கீர்த்தி

குட்லக் சகி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ் பச்சை நிற லெஹங்காவில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக மாறியவர்.

கீர்த்தி சுரேஷ்தமிழில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ‘இது என்ன மாயம்’ படத்தில் அறிமுகமானார். இந்த படம் தோல்வியைசந்தித்தாலும் , இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்த, ‘ரஜினிமுருகன்’ மற்றும் ‘ரெமோ’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது. அதே நேரம் கீர்த்தி சுரேஷின் தனித்துவமான நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்த படம் தெலுங்கில் வெளியான ‘மகாநடி’ திரைப்படம் தான்.

இந்த படத்தில் அச்சு அசல், நடிகையர் திலகம் சாவித்திரியாகவே (Savithiri) வாழ்ந்து நடித்திருந்தார் என்று கூறும் அளவிற்கு விமர்சனங்கள் கிடைத்தது.இந்த படத்திற்காக, கீர்த்தி சுரேஷ் தேசிய விருதையும் வென்றார். பின்னர் தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

தமிழில் செல்வராகவனுடன் இணைந்து நடித்துள்ள சாணிக் காயிதம் படம் மட்டுமே கீர்த்தி சுரேஷ் வசம் உள்ளது புதிப்படங்களில் நடிக்க எதுவும் ஒப்பந்தமாகவில்லை இந்த நிலையில்தெலுங்கில்இவர் நடிப்பில் தயாராகியுள்ள குட் லக் சகி ஜனவரி 28 அன்று தெலுங்கில் மட்டுமின்றி தமிழ் மற்றும் மலையாளத்திலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. இந்தப் படத்தை நாகேஷ் குகனூர் இயக்கியுள்ளார்.

படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்சாதாரண கிராமத்து பெண்ணாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் இந்திய துப்பாக்கி சுடும் அணியில் இடம்பெறுவது என கதை செல்கிறது.கடந்த ஆண்டிலேயே ரிலீஸ் திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. படத்தில் கீர்த்தி சுரேஷுடன் ஆதி, ஜெகபதிபாபு உள்ளிட்டவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்திற்கு இசையமைத்துள்ளார் தேவிஸ்ரீ பிரசாத்விளையாட்டை மையமாக கொண்டு வெளியாகும் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் முக்கியத்துவம் கொடுத்து வெற்றி பெற செய்வார்கள். அந்த வகையில் இந்தப் படமும் மிகவும் சிறப்பான வரவேற்பை பெறும் என்கிறது படக்குழுஅவ்வப்போது தன்னுடைய விதவிதமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது குட்லக் சகி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பச்சை நிற லெஹங்காவில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.