• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

திருப்பதி கோவிலில் பிப்ரவரி மாத தரிசன டிக்கெட் நாளை வெளியீடு

Byகாயத்ரி

Jan 27, 2022

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதம் தரிசனம் செய்வதற்கான சிறப்பு தரிசனம் டிக்கெட்டுகள் நாளையும், இலவச தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் நாளை மறுநாளும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

இதுதொடர்பாக, திருப்பதி- திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்ெகட்டுகள் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் வீதம் என 28-ந் தேதி (நாளை) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இலவச தரிசனத்துக்காக தினந்தோறும் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் 29ம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. எனவே பக்தர்கள் பிப்ரவரி மாதத்துக்கான டிக்கெட்டுகளை https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.