• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பஞ்சாப் முதல்வர் உறவினர் வீடுகளில் அமலாக்க துறையினர் சோதனை…!

இன்று காலை பஞ்சாப் முதல்வர் சரண் ஜித் சிங் சன்னி உறவினர் வீடுகளில் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாப் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது பெரும்பாலும் மணல் கடத்தல் குறித்த குற்றசாட்டுகள் தான் அதிகளவு பேசப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி அவர்களது மருமகனிடம் மணல் கடத்தல் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டது.

தற்பொழுதும் பஞ்சாப் முதல்வரின் உறவினர்கள் பத்து பேருக்கும் மேற்பட்டோரின் வீடுகளில் இன்று காலை முதல் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். சிலர் மீது பணமோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.