• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

இந்தியாவின் கண்டுபிடிப்பாளர்கள் நமது நாட்டை பெருமையடைய வைத்துள்ளனர்-பிரதமர் மோடி

Byகாயத்ரி

Jan 15, 2022

இந்தியாவில் வேளாண்மை, சுகாதாரம், நிறுவன நடைமுறைகள், விண்வெளி, தொழில்துறை, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 150 ஸ்டார்ட் அப் தொழில் முனைவோருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடி வருகிறார்.

வேர்களிலிருந்து வளர்ச்சி, டிஎன்ஏ-வை அசைத்தல், உள்ளுரிலிருந்து உலகம் வரை, தொழில்நுட்பத்தின் எதிர்காலம், உற்பத்தித்துறையின் சாம்பியன்களை உருவாக்குதல், நீடித்த வளர்ச்சி என்ற மையப்பொருள்கள் அடிப்படையில் தொழில்முனைவோர் 6 பணிக்குழுக்களாக பிரிக்கப்பட்டு, பிரதமர் மோடியுடன் உரையாடி வருகின்றனர்.இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பேசியதாவது:-

ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்தான் புதிய இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கப்போகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளை நிறைவு செய்தவுடன், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும். இந்தியாவின் கண்டுபிடிப்பாளர்கள் நமது நாட்டை உலக அளவில் பெருமையடைய வைத்துள்ளனர்.கண்டுபிடிப்புகளை வலுப்படுத்துவதற்கு, ஸ்டார்ட்-சூழல், தொழில்முனைவோர் நலன் ஆகிய முக்கிய அம்சங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கிறது. அரசின் செயல்பாடுகளில் கண்டுப்பிடிப்புகளின் தேவைகளை உள்வாங்கி, அதற்கேற்ப புதிய பாதைகளை அமைக்க வேண்டியதாக இருக்கிறது. இந்த யுகம், இந்தியாவின் தொழில்நுட்ப யுகம் ஆகும்.