• Tue. Apr 30th, 2024

பழனியில் தைப்பூச திருவிழாவிற்கு குவிந்த பக்தர்கள்

பழனியில் இன்று முதல் வரும் 18ஆம் தேதி வரை கோயிலில் அனுமதி இல்லை என்பதால் பக்தர்கள் குவிந்தனர். பழனியில் இன்று முதல் வரும் 18ஆம் தேதி வரை கோயிலில் அனுமதி இல்லை என்பதால் பக்தர்கள் குவிந்தனர். தமிழகத்தில் அதிக வருமானம் உள்ள கோயிலாக பழனி கோயில் உள்ள நிலையில், பிரசித்தி பெற்ற விழாவாக தைப்பூசம் விழா உள்ளது. இந்த விழாவில் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வழக்கமாக திரள்வார்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக இந்த விழா சிறப்பாக நடைபெறவில்லை.
இந்நிலையில் அரசு ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கும், இரவு நேரம் ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து பாதயாத்திரையாக பழனி கோயில் நோக்கி வந்தவண்ணம் உள்ளனர். சிலர் காவடி எடுத்தும், பாட்டுப்பாடி, ஆட்டம் ஆடியும் வருகின்றனர்.

இந்நிலையில்பழனி முருகன் கோவிலில் கடந்த 12-ந்தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக வார இறுதி நாட்களில் தரிசன தடை உள்பட இன்று முதல் வரும் 18ஆம் தேதி வரை கோயிலில் பக்தர்கள் அனுமதி இல்லை என அரசு அறிவித்துள்ளது. இதனால் தரிசனத்துக்கு நேற்றுதான் கடைசி என்பதால் பக்தர்கள் பழநியில் குவிந்தனர். பழனி அடிவாரம் , நான்கு ரத வீதி , கிரிவல வீதி உட்பட பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் ரோட்டை அடைத்து கொண்டு நடந்து சென்றதால் போலீசாரும் செய்வதறியாது தவித்தனர். பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளதால் பக்தர்கள் கோவிலில் இன்றைய சாமி தரிசனத்தை முடித்துவிட்டு திரும்ப எண்ணி கட்டுக்கடங்காத கூட்டம் பழனியில் படையெடுத்துள்ளது. இதையடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *