• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சபரிமலை சபரிபாட்டி உழவாரப்பணி சேவை

Byகாயத்ரி

Jan 12, 2022

ஸ்ரீ சபரிமலை சபரிபாட்டி உழவாரப்பணி பேரவை தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் ராஜோந்திரன் குருசாமி நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:

சபரிமலையில் மகர சங்கராந்தி திருநாளில் உலகத்தை காக்கக்கூடிய தர்மசாஸ்தா ஐயப்பனுக்கு கோடிக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய தமிழக அரசும் கேரள அரசும் கொடூர நேயானா கொரோனா உலக அளிவில் பரவி இருக்கும் இந்த காலகட்டத்தில் கட்டுப்பாடுடன் பல உதவிகளை செய்து, அரசுடைய விதிமுறைக்குட்பட்டு கோடிக்கணக்கான ஐயப்ப பக்தர்களுக்கு அனுமதி கொடுத்து அவர்கள் ஐயப்பனை தரிசன செய்ய வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்த தமிழக மற்றும் கேரள அரசுக்கு ஸ்ரீ சபரிமலை சபரிபாட்டி உழவாரப்பணி பேரவை தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் ராஜோந்திரன் குருசாமி நன்றிகள் தெரிவித்தள்ளார்.

மகர சங்கராந்தி திருநாளில் இந்த கொடிய நோயை ஒழிக்க வேண்டும், எல்லோரும் சாதி மதம் கடந்து சுவாமி ஐயப்பனை பிராத்தித்து எல்லோரது வீட்டிலும் தீபம் ஏற்றி ஜனவரி 14 தை 1 ஆம் தேதி சங்கராந்தி திருநாளில் மாலை 6 மணியிலிருந்து 7.30 வரை, பெரியோரிலிருந்து சிறியோர் வரை எல்லோரும் அவர்களது குலதெய்வங்களை, அவரவரது மூதாதேய முன்னோர்களை, சுவாமி ஐயப்பனை, அவரவரின் இஷ்ட தெய்வங்களை வணங்கி இந்த கொரோனா நோயலிருந்து நீங்கி மக்கள் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்ய வேண்டும்.எம்பெருமான் ஐயப்பன் காட்சி தரும் அந்நாளில் உலகில் வாழும் எல்லா மக்களும் சேஷமமாக வாழ வேண்டும் என்கிற கருத்தோடு ஐயப்பனை பிரார்த்தனை செய்ய தமிழகம் முழுவதும் எங்கள் சேவா பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

எங்களது ஸ்ரீ சபரிமலை சபரிபாட்டி உழவாரப்பணி சார்பாக ப்ரத்யங்கிர பூஜை, சுதர்ஷன பூஜை, கோமாதா பூஜை, அன்னதானம், பஜனைகள் எல்லா கோவில்களுலும் தங்களால் முடிந்த உழவார பணிகளை செய்து வருகிறோம்.தர்மத்தை நிலை நாட்டிட எல்லா ஜீவராசிகளும் சுதந்திரமாக இயற்கையை சார்ந்து வாழ இறைவன் அருள் புரிய வேண்டுமென்று இப்பணியை தாங்கள் மேற்கொண்டுவருவதாக கூறியுள்ளார்.ஜனவரி 18 ஆம் தேதி முதல் 19,20,21, எருமேலி, பம்பா, சன்னிதானம், பெருநாடு போன்ற இடங்களில் சபரிமலை சபரிபாட்டி உழவாரப்பணியின் சார்பாக ஐயப்பமார்கள் தங்களது உழவாரப்பணி சேவையை ஆற்றி சேவையில் கலந்துக்கொண்டுஆத்மார்தமாக ஐயப்பனின் அடியார்களுக்கு சேவை செய்ய அன்போடு அழைப்பதாக தெரிவித்தார்.