கொரோனா பரவலால் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு தடை விதித்துள்ளது. அதன்படி கடந்த 3 நாட்களாக மூடப்பட்டிருந்த கோவில்கள், இன்று திறக்கப்பட்டுள்ளன.
இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில், இன்று அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர். வரும் 12ஆம் தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதால் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று கிரிவலம் சுற்றி வந்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
கூட்ட நெரிசலை தவிர்க்க தை பூசம் வரையாவது சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
                               
                  












              ; ?>)
; ?>)
; ?>)