• Fri. Oct 2nd, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

நாய் சேகருக்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்

இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாவதாக இருந்த பெரிய பட்ஜெட் திரைப்படங்களான ஆர்ஆர்ஆர்,ராதே ஷ்யாம்,வலிமைபோன்ற திரைப்படங்கள் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தன.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் சில பொங்கல் பண்டிகையில் வெளியாகின்றன. அந்த வகையில் நடிகர் சதீஷ், ‘குக் வித் கோமாளி’ தொலைக்காட்சி தொடர் புகழ் பவித்ர லட்சுமி இருவரும் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘நாய் சேகர்’ திரைப்படம் வருகிற 13-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.


இந்த நிலையில் தற்போது ‘நாய் சேகர்’ திரைப்படத்திற்கு தணிக்கைத்துறை யு சான்றிதழ் வழங்கியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த திரைப்படத்தை கல்பாத்தி எஸ். அகோரம் தயாரித்துள்ளார்.