• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

லாரன்சை இயக்க இருக்கும் சண்டை இயக்குனர்கள் அன்பறிவ்

ராகவா லாரன்ஸின் ‘துர்கா’ படத்தின் மூலம் பிரபல சண்டை இயக்குநர்களான அன்பறிவ் சகோதரர்கள் இயக்குநர்களாக மாறுகிறார்கள்.

பேய் படங்களின் வித்தியாச முயற்சிகளுக்கு அடித்தளமிட்டவர் ராகவா லாரன்ஸ். இவருடைய ஸ்ரீராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘காஞ்சனா’ பெயரில் வெளிவந்த அனைத்து படங்களுமே வெற்றிவாகை சூடி சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.

அவர் அடுத்தாக தனது ஸ்ரீராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் படம் ‘துர்கா’. இந்தப் படத்தின் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகிறார்கள் இரட்டையர்களான பிரபல ஸ்டண்ட் இயகுநர்களான அன்பறிவ் இருவரும்.

இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழி நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகுமாம்.

ராகவா லாரன்ஸ் தற்போது ‘ஆடுகளம்’ கதிரேசன் தயாரித்து, இயக்கும் ‘ருத்ரன்’ படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து வெற்றி மாறன் கதை எழுத, ‘ஆடுகளம்’ கதிரேசன், வெற்றி மாறன் இருவரது தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் ‘அதிகாரம்’ படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.