• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஷகீலா வாழ்க்கை வரலாறு படமாகிறது!…

Byகுமார்

Aug 8, 2021

மலையாள திரையுலகில் 1990-களில் மம்முட்டி, மோகன்லால் நடித்த படங்கள் கூட ஷகீலா படம் எப்போது வருகிறது என்பதை அறிந்து கொண்டு வெளியீட்டு தேதியை தீர்மானிப்பார்கள்

மலையாள திரையுலகில கவர்ச்சியால் கலக்கியவர் ஷகிலா. இவரது படங்கள் முன்னணி நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் படங்களை வசூலில் பின்னுக்கு தள்ளி அதிர்ச்சியூட்டிய சம்பவங்கள் நடந்தேறியது இதையடுத்து ஆபாச படங்களில் நடிப்பதாக ஷகிலா மீது குற்றம் சுமத்தி மலையாள பட உலகில் இருந்து அவரை நிரந்தரமாக வெளியேற்றி விட்டனர்.

ஷகிலா வாழ்க்கையை கடந்த வருடம் ஷகிலா என்ற பெயரிலேயே படமாக எடுத்து வெளியிட்டனர். ஷகிலா வேடத்தில் ரிச்சா சதா நடித்து இருந்தார். படத்தில் பிரபல மலையாள நடிகரை வில்லனாக சித்தரித்து இருந்ததாக எதிர்ப்புகள் கிளம்பின. கற்பழிப்பு குற்றங்களுக்கு ஷகிலா படங்கள் காரணமாக உள்ளன என்று திரையுலகினரையும், பெண்கள் அமைப்பினரையும் அவர் தூண்டி விட்டு நடிக்க தடை விதிக்க வைப்பது போன்ற காட்சிகள் இருந்தன.

இந்த நிலையில் மீண்டும் ஷகிலா வாழ்க்கையை இந்தி, தமிழில் படமாக்க உள்ளனர். இதில் ஷகிலா வேடத்தில் நடிக்க ரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்து பிரபலமான கியூமா குரோஷியிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.