• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நான் மக்களின் சூப்பர் ஹீரோ. . . வீண் விளம்பரம் தேடுகிறாரா தேனி கலெக்டர்

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் திடீர் திடீரென சுற்றுப்பயணம் செய்து பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருவதுடன், முகக்கவசம் அணிவது, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி பல்வேறு பிரச்சாரங்கள் செய்து வருகிறார்.

மேலும் முகக் கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடும் நபர்களை எச்சரிப்பது மற்றும் அவர்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று மாவட்டத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களைப் பார்வையிடச் சென்ற மாவட்ட ஆட்சியர் முரளிதரன் ஆண்டிபட்டி பகுதியில் சென்றபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனங்களை நிறுத்தி ,முகக்கவசம் அணியாமல் வந்தவர்களை எச்சரித்ததுடன் அபராதமும் விதித்தார். மேலும் அவ்வழியாக வந்த அரசுப் பேருந்துகளை நிறுத்தி சோதனையிட்ட மாவட்ட ஆட்சியர் முகக் கவசம் அணியாமல் பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகளை பார்த்து உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அடுத்தவர்களின் உயிரோடு விளையாடுகிறார்களே என்று கடுமையாக எச்சரித்தார். இந்த வீடியோ தற்போது தேனி மாவட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.


மேற்கூறிய அனைத்து செயல்களும் வரவேற்கத்தக்கது, பாரட்ட வேண்டியது.அதற்காக இதை மட்டுமே செய்து கொண்டிருந்தால் மற்ற விஷயங்களில் எப்போது ஆய்வு செய்வார் ஆக்ஷனில் இறங்குவார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது. முககவசம் உயிர் கவசம் என்று விழிப்புணர்வு செய்யும் மாவட்ட ஆட்சியர் தங்களது மாவட்டத்தில் தடுப்பூசி போதுமான அளவில் இருக்கிறதா என்று அரசு மருத்துவமனை டீன்-யிடம் ஆலோசனை செய்து ஆய்வு செய்ய வேண்டும்.

தற்போது பல இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதாக சிறு புகார் எழுந்துள்ளது, அது சிறிய அளவில் இருக்கும் போதே சரி செய்ய வேண்டும்.அதை தவிர்த்து விட்டு பிரச்சனை பூதாகரமாக வெடிக்கும் போது தனி ஒருவராக “எல்லாத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன், எல்லாம் சரி ஆகிடும்” என்று ஆறுதல் கூறிவிட்டு அவரும் மற்ற வேலைகளில் பிஸியாகிவிடுவார்.மக்கள் மீண்டும் எதுவும் கிடைக்கவில்லை என்று போராட வேண்டி உள்ளது.


ஆகவே தொகுதி மக்களை சட்டமன்ற உறுப்பினர் வந்து சந்திக்கிறாரோ இல்லையோ மாவட்ட ஆட்சியர் அனைத்து மக்களையும் அரவணைத்து செல்ல வேண்டும். கடமையை சரியாக செய்தால் சூப்பர் ஹீரோவாக மக்களே கொண்டாடுவார்கள்.நீங்கள் கொண்டாட அறிவுறுத்த வேண்டாம்.