• Thu. Jul 16th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

குவியல் குவியலாக கொட்டிக் கிடக்கும் விலையில்லா பொருட்கள்….

Byகாயத்ரி

Jan 1, 2022

புதுக்கோட்டை அருகே உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில், விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் போன்ற பொருட்கள் பயன்பாடற்ற நிலையில் குவியல் குவியலாக வைக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டன.இந்நிலையில், புதுக்கோட்டை சிப்காட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி போன்றவை அட்டை பெட்டிகளில் உள்ள நிலையில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்களை மக்களிடம் முழுமையாக கொண்டு சேர்க்காமல் பயனற்று கிடப்பதாக புகார் எழுந்தது.இது குறித்து நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளரிடம் கேட்ட போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்தது போக மீதமுள்ளவை சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும், இது குறித்து அரசுக்கு முறையாக தகவல்கள் அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.