• Sun. Nov 29th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

கோவையில் 40 நிமிடங்களில் 365 சிறப்பு தினங்களை வரிசைப்படுத்தி 75 மழலைக் குழந்தைகள் உலக சாதனை..,

BySeenu

Nov 29, 2026

கோவையில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் மற்றும் மவுண்ட் கார்மல் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி இணைந்து நடத்திய உலக சாதனை நிகழ்ச்சியில், 75 மாணவ, மாணவியர் வெறும் 40 நிமிடங்களில் ஆண்டின் 365 நாட்களில் கடைப்பிடிக்கப்படும் 365 சிறப்பு தினங்களையும் வரிசைப்படுத்தி உலக சாதனை படைத்தனர்.

மாணவர்களின் தன்னம்பிக்கை, நினைவாற்றல் மற்றும் தனித்திறன்களை மேம்படுத்தி, சிறு வயதிலேயே சாதனை முயற்சிகளில் ஈடுபட ஊக்குவிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சுமார் மூன்று வயது முதல் பள்ளி மாணவர்கள் வரை ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது அபார நினைவாற்றலையும் திறமையையும் வெளிப்படுத்தினர்.

ஒரே அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஒவ்வொரு நாளுக்குமான சிறப்பு தினங்களை மாணவர்கள் எவ்விதத் தயக்கமுமின்றி வரிசையாக எடுத்துரைத்தனர்.

சிறு குழந்தைகள் இவ்வளவு குறுகிய நேரத்தில் 365 சிறப்பு தினங்களையும் நினைவில் வைத்து வரிசைப்படுத்தியதைக் கண்டு அங்கிருந்த பெற்றோர்கள் வியப்படைந்தனர்.

மழலைக் குழந்தைகள் மேடையில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியபோது, அரங்கில் அமர்ந்திருந்த பெற்றோர்கள் கைகளைத் தட்டி உற்சாகப்படுத்தினர்.

குழந்தைகளின் ஒவ்வொரு சாதனை முயற்சியையும் பார்த்து பெற்றோர்கள் மகிழ்ச்சியிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்ந்தனர்.

இறுதியில், 40 நிமிடங்களில் 365 சிறப்பு தினங்களை வரிசைப்படுத்தி உலக சாதனை படைத்த 75 மாணவ, மாணவியருக்கும் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் சார்பில் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சிறு வயதிலேயே குழந்தைகளின் நினைவாற்றல், தன்னம்பிக்கை மற்றும் தனித்திறன்களை அடையாளம் கண்டு ஊக்குவித்தால் அவர்களாலும் பல்வேறு சாதனைகளைப் படைக்க முடியும் என்பதை இந்நிகழ்ச்சி வெளிப்படுத்தியது.