• Sun. Nov 29th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

மாந்தோப்பில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த முதியவர் கைது..,

ByKalamegam Viswanathan

Nov 29, 2026

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ளவெள்ளையம்பட்டி பகுதியில் அரசு டாஸ்மார்க் மது பாட்டில்களை சட்டவிரோதமாக மாந்தோப்பில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பாலமேடு போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து போலீசார் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்பவரை பிடிக்க மறைந்து நின்று கண்காணிதனர் அப்போது சந்தேகத்திற்கிடமான நிலையில் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்த தர்மர் (52) என்பவரை பிடித்து சோதனை செய்தபோது மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது.

அவரிடமிருந்து 200 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் மதுவிற்ற பணம் ரூ.64 ஆயிரத்தை பறிமுதல் செய்து தர்மரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.