• Sun. Nov 29th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

கோவையில் புத்துளிர் 3.0 புத்தாக்கப் போட்டி..,

BySeenu

Nov 29, 2026

கோவையில் தானிஷ் அகமது .தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் இணைந்து நடத்திய புத்துளிர் 3.0 (AI Edition) மண்டல அளவிலான புத்தாக்கம் மற்றும் சிந்தனைத் திறன் போட்டியில் 600-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு பள்ளி மாணவர்களிடையே அறிவியல் சிந்தனை, படைப்பாற்றல், புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்முனைவுத் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் விக்னேஷ், போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், கல்வியில் தொடர் முயற்சியும் விடாமுயற்சியும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், பசுமைத் தொழில்நுட்பம் உள்ளிட்ட தலைப்புகளில் தங்களது புத்தாக்கத் திட்டங்களைச் சமர்ப்பித்து காட்சிப்படுத்தினர். அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தொழில்நுட்பம் மூலம் தீர்வு காணும் வகையிலான மாணவர்களின் படைப்புகள் இடம்பெற்றன.

பல்வேறு பிரிவுகளில் சிறந்த திட்டங்களைச் சமர்ப்பித்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், கல்லூரி நிர்வாகம் சார்பில் கூடுதல் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன. இம்மண்டலத் தேர்வில் தேர்வு செய்யப்படும் மாணவர் குழுக்கள், சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள் ஆசிரியர்கள் என ஏராளமானோர் இந்நகரில்கலந்து கொண்டனர்