• Sat. Nov 28th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

பிராய்லர் கோழி பண்ணைகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்..,

BySeenu

Nov 28, 2026

கோவை, சித்தாபுதூர் பி.கே.ஆர். நகரில் ஓடைக்கு அருகே 14 குளத்து நாரைகள் கடந்த 18 ம் தேதி இறந்து கிடந்தது. வனத்துறையினர் இறந்த நாரைகளின் உடல்களை சேகரித்து, முழுப் பறவை மாதிரிகளையும் பறவைக் காய்ச்சல் பரிசோதனைக்காக போபாலில் உள்ள ICAR-NIHSAD-க்கு நேரடியாக அனுப்பினர். அதில் பறவை காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து கோவை மாநகராட்சி சார்பில் பாதிக்கப்பட்ட பகுதியில் தேவையான உயிரியல் பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.மேலும்
இறந்த நாரைகள. இருந்த இடத்தை சுற்றி 1 கி.மீ. தொலைவிற்கு எந்தக் கோழிப் பண்ணையும் இல்லை என்பதும், எந்தக் கோழி இறப்பும் பதிவு செய்யப்படவில்லை.

எனினும் கோவை மாவட்டத்தில் உள்ள பிராய்லர் கோழிப் பண்ணையாளர்களுக்கு சங்கங்கள் மூலம் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கு இடமான வகையில் கோழிகள் இறப்பு இருந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கும்படி கோழிப் பண்ணையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் கொடுத்துள்ளது. கோவை மாவட்டத்தை அடுத்த
தமிழக கேரளா எல்லையில் உள்ள 12 சோதனைச் சாவடிகளிலும் சுகாதாரத் துறையினர் கண்காணிப்பு பணியினை தீவிர படுத்தியுள்ளனர்.