• Sat. Nov 28th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் மத நல்லிணக்கம் ஓங்கி நிற்கும் நிகழ்வு..,

ByKalamegam Viswanathan

Nov 28, 2026

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் மத நல்லிணக்கம் ஓங்கி நிற்கும் நிகழ்வு, காண்போர் மனதை நெகிழ வைக்கிறது. காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு செல்லும் இந்து பக்தர்களும், சிக்கந்தர் தர்காவிற்குச் செல்லும் இஸ்லாமியப் பெருமக்களும் ஒரே பாதையில் பயணிப்பது, தனித்துவமான ஆன்மீக ஒற்றுமையைப் பறைசாற்றுகிறது.

பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு அனைவரும் அனுமதிக்கப்பட்டாலும், எந்தவித அசம்பாவிதமும் இன்றி, மிகுந்த அமைதியுடனும் மரியாதையுடனும் இரு மதத்தினரும் சென்று வழிபட்டுத் திரும்புவது அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக நல்லிணக்கத்திற்கு இக்காட்சி ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.