• Sat. Nov 28th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளரிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்..,

ByKalamegam Viswanathan

Nov 28, 2026

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் கருப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வெற்றி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக ஊராட்சி செயலாளரிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

எப்போதும் போல் காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கிய நிலையில் சொற்ப அளவிலே கிராம சபை கூட்டத்திற்கு வந்த பொது மக்களிடம் கூட்டத்தை நடத்தாமலேயே கையெழுத்து வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த பகுதி பொதுமக்கள் கூட்டத்தை நடத்தி விட்டு கையெழுத்து வாங்க கோரி ஊராட்சி செயலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கிராம சபை கூட்டத்தில் பெரிய சலசலப்பு ஏற்பட்டது

அப்போது கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கணேசபுரம் பொம்மன்பட்டி அம்மாச்சிபுரம் ஆகிய கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பே தங்களுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்க கோரி மனு கொடுத்த நிலையில் தங்கள் பெயர் வராமல் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மனு கொடுத்தவர்களின் பெயர்கள் பயனாளிகள் பட்டியலில் எவ்வாறு உள்ளது.

அரசு அனைவருக்கும் பொதுவானது தானே இரண்டு வருடங்களுக்கு முன்பே மனு கொடுத்தவர்களுக்கு வரிசைப்படி வீடு வழங்காமல் தற்போது ஆளும்கட்சிக்கு ஆதரவான நிலையில் இருப்பவர்களுக்கு மட்டும் ஏன் வீடு வழக்குகிறீர்கள்
என கேட்டு ஊராட்சி செயலாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக விஜய் ஆட்சி அமைந்தவுடன் கருப்பட்டி பகுதியைச் சேர்ந்த தவெக
நிர்வாகிகள் பொது மக்களிடம் மனுக்கள் வாங்குவதும் மனுக்கள் மீது தாங்களே நடவடிக்கை எடுத்ததாக ரீல்ஸ் போடுவதுமாக தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது தவெக நிர்வாகிகளுக்கு ஆதரவானவர்களிடம் வீடு வழங்குவதாக கூறி
பணம் பெற்றுக் கொண்டதாக அந்த பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

ஆனால் ஊராட்சி செயலாளர் இதை மறுத்து தகுதியான நபர்களுக்கு வீடுகள் வழங்கப்படுவதாகவும் இதில் பாரபட்சம் காட்ட வில்லை என தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தார் ஆனால் முன்னுரிமை அடிப்படையில் ஏற்கனவே ஊராட்சி செயலாளரிடம் மனு அளித்தவர்களுக்கு வீடு வழங்காமல் தற்போது தவெக நிர்வாகிகளுக்கு ஆதரவாக செயல்படுபவர்களுக்கு வீடுகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பத்து நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 8 நிமிடங்களுக்கு மேல் வாக்குவாதம் நடைபெற்றதால் எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் கிராம சபை கூட்டம் முடிந்தது. மேலும் வாடிப்பட்டி ஒன்றிய அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் யாரும் வராத நிலையில் கருப்பட்டி ஊராட்சி செயலாளர் மட்டுமே கலந்து கொண்டு கிராம சபை கூட்டத்தை நடத்தியது அந்த பகுதி பொதுமக்களிடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அதிகாரிகள் வந்தால் தானே எங்களது குறைகளை சொல்ல முடியும் என மேலும் மேலும் ஊராட்சி செயலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கிராம சபைக் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.