• Fri. Nov 27th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் கணிதத் திருவிழா..,

Byp Kumar

Nov 27, 2026

திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையேயான கணித வினாடி-வினா, கணித ரங்கோலிப் போட்டிகள் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பள்ளியின் முன்னாள் மாணவரும், தென் கொரியா- எல்.ஜி. எலெக்ட்ரானிக்ஸ்
ஆராய்ச்சியாளருமான சேவியர் ஜெரால்டு புனிதனின் நிதிப் பங்களிப்போடு இப்போட்டிகள் நடைபெற்றன.

போட்டிகளை பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமையாசிரியர் ஸ்டீபன் லூர்து பிரகாசம், தொடங்கி வைத்தார்.

கணித வினாடி-வினா தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு பிரிவுகளாகவும், கணித ரங்கோலி ஒரு பிரிவாகவும் நடைபெற்றது.

கணித வினாடி-வினாப் போட்டியில் 25-க்கு மேற்பட்ட பள்ளிகளை சார்ந்த 40 குழுக்களும், கணித ரங்கோலிப் போட்டியில் 30 குழுக்களும் பங்கேற்றன.

மாலையில் நடைபெற்ற ‘Maths Utsav-2k26″ பரிசளிப்பு விழாவிற்கு பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமையாசிரியர் அருள்பணி.V. ஸ்டீபன் லூர்து பிரகாசம், சே.ச.. தலைமையயேற்க. சிறப்பு விருந்தினராக எம் பள்ளியின் பெருமைமிகு முன்னாள் மாணவர் திருமிகு.E. ஜோன்ஸ், சென்னை ஆர்க்கிடன்ஸ் டெக்னாஜிஸ், முதன்மைச் செயல் அலுவலர் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

4 குழுக்களுக்கு தனித்தனியே முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.4 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.3 ஆயிரம் மற்றும் இரண்டு குழுக்களுக்கு ஆறுதல் பரிசாக ரூ. 2 ஆயிரம் வீதமும் பங்கேற்ற அனைத்துக் குழுக்களுக்கும் ரூ. ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பரிசுத்தொகையாகவும், சுழற்கேடயங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

பள்ளியின் கணித ஆசிரியர் மரிய ராஜேந்திரன், ஆசிரியர் கிறிஸ்டோபர், கணித மன்ற பொறுப்பாளர்கள் செலாஸ்டின், ஹென்றி பிரதீப் குமார், உதவித்தலைமையாசிரியர் தெரசுநாதன், ஜோசப் சேவியர், மரிய தேன் அமிர்தராஜ், ஹாஸ்டின் தனபுஷ்பராஜ், தாமஸ் சேவியர் ராஜன் ஆகியோர் போட்டிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.