• Fri. Nov 27th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..,

Byp Kumar

Nov 27, 2026

1986-87 ஆண்டு கரூர் அகல ரயில் பாதை விரிவாக்கத்திற்காக கக்கன் தெருவில் வசித்து வந்த 60 வீடுகளை காலி செய்ய வைத்தனர்.

அந்த வீடுகளில் வசித்து வந்த பொதுமக்களுக்கு அப்போதைய மாவட்ட வருவாய் துறையினர் நத்தம் சாலையில் உள்ள அண்ணா காலனியில் மாற்று இடம் ஒரு ஏக்கர் 54 சென்ட் இடத்தை ஒதுக்கி கொடுத்தனர்.

தற்பொழுது அண்ணா காலனி திண்டுக்கல் 35 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியாகும். இங்கு 60க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு கடந்த 40 வருடங்களாக வசித்து வருகின்றனர்.

மேலும் வீட்டு வரி குழாய் வரி செலுத்து வருகின்றனர். மேலும் சாலை வசதி, தெரு விளக்கு வசதி, போன்ற அடிப்படை வசதிகள் மாநகராட்சி நிர்வாகத்தால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 18ம் தேதி திண்டுக்கல் ரயில்வே நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் இந்த இடம் ரயில்வேவிற்கு சொந்தமான இடம் ஆகவே காலி செய்ய வேண்டும் என கூறி நோட்டீஸ் ஒட்டி சென்றனர்.

இதனையடுத்து கடந்த 19.11.26 ஜேசிபி இயந்திரம் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் வந்து இடத்தை காலி செய்யுமாறு வலியுறுத்தினர். பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாக தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரயில்வே நிர்வாகத்தால் மாற்று இடம் வழங்கப்பட்டதை மீண்டும் கையகப்படுத்த நினைக்கும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து திண்டுக்கல் ரயில் நிலையம் முன்பு இன்று 27.11.26 மாலை பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் ரயில்வே நிர்வாகத்திற்கு எதிராகவும் தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.

40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அடுத்த கட்டமாக மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.